கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குன்றத்தூரில் எலி மருந்து வைத்ததில் இரண்டு குழந்தைகள் பலியான விவகாரத்தில் PEST CONTROL நிறுவனத்தின் உரிமத்தை வேலான் துறை அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர்.
சென்னை அருகே குன்றத்தூரில் தனியார் வங்கி மேலாளர் வீட்டில் எலி தொல்லை காரணமாக தனியார் பெஸ்ட் கண்ட்ரோல் நிறுவனத்தின் மூலம் எலி மருந்து வைத்த விவகாரத்தில் நெடி தாக்கியதில் இரண்டு குழந்தைகள் பலியானர்கள் கணவன் மனைவி சிகிச்சை பெற்று வரும் நிலையில் இது குறித்து குன்றத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர் வேளாண்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை செய்தபோது எலிமருந்து வீட்டிற்குள் வைக்க கூடாது எனவும் வெளிப்புறத்தில் தான் வைக்க வேண்டும் எனவும் விதிமுறை மீறி செயல்பட்டதால் அந்த தனியார் நிறுவனத்தின் உரிமையை ரத்து செய்து அம்பத்தூர் வேளாண் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இன்று அல்லது திங்கட்கிழமை அந்த தனியார் நிறுவனத்திற்கு சீல் வைக்கப்படும் என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் ஏற்கனவே அந்த நிறுவனத்தில் பணிபுரியும் இரண்டு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வந்தே பாரத் ரயிலில் இன்று காலை வழங்கப்பட்ட சாம்பாரில் வண்டு கிடப்பதாக புகார்.