Homeசெய்திகள்சென்னை பழங்குயின மாணவர்களிடையே மருத்துவ படிப்பு குறித்து – ஆளுநர் கேள்வி

 பழங்குயின மாணவர்களிடையே மருத்துவ படிப்பு குறித்து – ஆளுநர் கேள்வி

-

- Advertisement -

மருத்துவ படிப்பு குறித்து கேள்வியெழுப்பிய ஆளுநர் – நீட் தேர்வில் தேர்ச்சி பெறாததால் பொறியியல் படித்துக்கொண்டே நீட் தேர்விற்கு ஆன்லைன் பயிற்சி மேற்கொண்டு வருவதாக பதிலளித்த பழங்குடியின மாணவர். பழங்குயின மாணவர்களிடையே மருத்துவ படிப்பு குறித்து – ஆளுநர் கேள்வி

சென்னை கிண்டி பழங்குடியினர் இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் பழங்குடியின மாணவர்களிடையே ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடலில் ஈடுபட்டார்.யாரெல்லாம் மருத்துவராக வேண்டும் என விருப்படுகிறீர்கள் என ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வியெழுப்ப ,ஜார்க்கண்ட் மாநில பழங்குடியின மாணவர் மருத்துவ படிக்க ஆசை பட்டேன் என பதிலளித்தார்.

தற்போது என்ன படிக்கிறீர்கள் என ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வியெழுப்ப, பொறியியல் பயில்கிறேன் என பதிலளிக்க, பொறியியல் படித்து வரும் நிலையில் மருத்துவராக என்ன படிக்க வேண்டும் என தெரியுமா என கேட்க, நீட் தேர்வு படிக்க வேண்டும் என்றும் முதல் முறை நீட் தேர்வு எழுதி தேர்வு பெறாதாதல் தற்போது பொறியியல் படித்துக்கொண்டே ஆன்லைனில் நீட் தேர்வு பயிற்சி மேற்கொள்வதாக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பதிலளித்தார்.  தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பழங்குடியின இளைஞர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

யுஜிசியின் புதிய நெறிமுறைகள் ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் – சொ.ஜோ அருண்

MUST READ