Homeசெய்திகள்சென்னைசென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சாதியினருக்கும் பிரதிநிதித்துவம் : வழக்கறிஞர்கள் தீர்மானம்!

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சாதியினருக்கும் பிரதிநிதித்துவம் : வழக்கறிஞர்கள் தீர்மானம்!

-

- Advertisement -

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சமூகத்தினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் தர வேண்டும்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சாதியினருக்கும் பிரதிநிதித்துவம் : வழக்கறிஞர்கள் தீர்மானம்!சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் அவசர பொதுக்குழுவில் தீர்மானம்!

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சமுதாயத்தினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கி சமூக நீதி பின்பற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் அவசர பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

சங்கத்தின் தலைவர் மோகனகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வழக்கறிஞர் பால் கனகராஜ், வேல்முருகன், சங்கரசுப்பு, விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

பின்னர் நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சமுதாயத்தினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் தர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

இதுகுறித்து வழக்கறிஞர் சங்கங்களுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும் மேலும் வரும் ஏழாம் தேதி இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவெடுத்துள்ளனர்.

MUST READ