விமான நிலைய மேம்பாட்டுக் கட்டணம் உயர்வு
நாடு முழுவதும் விமான நிலைய மேம்பாட்டு கட்டணத்தை ஒன்றிய அரசு உயர்த்தி இருப்பதால் விமான பயண சீட்டு விலை கணிசமாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் உள்ள அடிப்படை வசதிகளுக்கு ஏற்ப ஒவ்வொரு பயணி இடமிருந்தும் விமான மேம்பாட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சென்னை விமான நிலையத்திலும் இக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் உள்நாட்டு விமான பயணிகளுக்கான கட்டணம் 90 ரூபாய் உயர்த்தப்பட்டு 295 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்திலிருந்து சர்வதேச விமானங்களில் பயணிப்பவர்களுக்கு விமான நிலைய மேம்பாட்டு கட்டணம் 150 ரூபாய் உயர்த்தப்பட்டு 450 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விமான நிலையம் மேம்பாட்டு கட்டணமானது பயணிகளின் டிக்கெட் கட்டணத்துடன் சேர்த்து வசூலிக்கப்படும். அது மறைமுக கட்டணமாக பார்க்கப்படுகிறது.
இதனிடையே சென்னை விமான நிலையத்தில் கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏப்ரலில் பயணிகளின் எண்ணிக்கை 10,837 வரை அதிகரித்துள்ளது.
ஆனால் மார்ச் மாதத்தை விட ஏப்ரலில் 617 விமானங்கள் குறைவாக இயக்கப்பட்டதாகவும் இம்மாதம் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.