சென்னை எழும்பூரில் உள்ள ஆல்பர்ட் தியேட்டரில் சுகாதாரமற்ற கெட்டுப்போன குளிர்பானங்களை விற்பனை செய்ததால் பரபரப்பு. சென்னை கொளத்தூரைச் சேர்ந்த நித்யா என்பவர் குடும்பத்துடன் நேற்று மாலை எழும்பூர் ஆல்பர்ட் திரையரங்கில் படம் பார்க்க வந்துள்ளார். நடிகர் ஜீவா நடித்து வெளியான அகத்தியா திரைப்படத்தை பார்க்க வந்தபோது இடைவேளை நேரத்தில் தியேட்டர் கேண்டினில் குளிர்பானம் வாங்கி தனது குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார். அந்த குளிர்பானம் முற்றிலும் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
மேலும் குளிர்பானம் காலாவதி ஆகி இருப்பதாகவும் குற்றம் சாட்டி கேண்டின் நிர்வாகத்தினருடன் நித்யா வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது காவல்துறையினர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
குளிர்பானம் அனைத்தையும் சோதனை செய்து சில குளிர்பானத்தின் பாட்டில்கள் சுகாதாரமற்ற முறையிலும் சரக்கு வாடை அடிப்பது போன்று இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பெண் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை மெட்ரோ சாதனை.. பிப்ரவரி மாதம் மட்டும் 86.65 லட்சம் பயணிகள் பயணம்!