சென்னை ஆலந்தூர் அருகே அரசு இடத்தை ஆக்கிரமித்த கடைகளுக்கு சீல்
சென்னை ஆலந்தூர் அருகே ரூ.150 கோடி மதிப்புள்ள ஒரு ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமித்த கடைகளுக்கு சீல் வைத்து வருவாய் துறையினர் மீட்டனர்.
சென்னையை அடுத்த புனிததோமையாளர் மலை கிராமம் கத்திபார மேம்பாலம் அருகே அரசு நிலம் ஒரு ஏக்கர் உள்ளது. இதனை தனியார் சிலர் கடைகள், குடோன்கள், கிளப் என நடத்திவந்தனர். இது தொடர்பாக வருவாய் துறை சார்பில் நிதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் நிதிமன்ற பல ஆண்டுகளுக்கு ஆண்டுகளாக ஆக்கிரமித்த நபர்கள் ஒட்டுமொத்தமாக அரசுக்கு 35 கோடியை செலுத்தி நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என தீர்ப்பு வெளியானது.
இதனையடுத்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ராகுல்நாத் உத்திரவின் பேரில், பல்லாவரம் வட்டாட்சியர் ஆறுமுகம் தலைமையில் வருவாய்துறை அதிகாரிகள், காவல் துறையினர் பாதுகாப்புடன் குடோன்கள், கிளப்கள், டீ கடை உள்ளிட்ட 25 கடைகளில் ஆட்களை வெளியேற்றியும், ஏற்கனவே இருந்த பூட்டுகளை அகற்றி புதிய பூட்டுகளை போட்டும் சீல் வைத்தனர். மேலும் அரசுக்கு சொந்தமான இடத்திற்கு யாரும் அத்துமீறி செல்லக்கூட்டாது என பெரிய அளவிலான பதாகைகளை நிறுவினார்கள்.