Homeசெய்திகள்சென்னைசென்னை பல்கலைகழகத்தில் மதம் தொடர்பான கருத்தரங்கம் - ரத்து செய்த நிர்வாகம்

சென்னை பல்கலைகழகத்தில் மதம் தொடர்பான கருத்தரங்கம் – ரத்து செய்த நிர்வாகம்

-

- Advertisement -

சென்னை பல்கலைக்கழகத்தில் கிறிஸ்துவம் தொடர்பான சொற்பொழிவு விவகாரம் சர்ச்சையானதால்  நிகழ்ச்சியை ரத்து செய்து பல்கலைக்கழக பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை பல்கலைகழகத்தில் மதம் தொடர்பான கருத்தரங்கம் - ரத்து செய்த நிர்வாகம்

 

சென்னை பல்கலைக்கழகத்தின் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை சார்பில் சுப்ரமணிய ஐயர் அறக்கட்டளை இணைந்து சொற்பொழிவு ஒன்று நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்தாண்டிற்கான  சொற்பொழிவு “இந்தியாவில் கிறிஸ்துவ மதத்தை பரப்புவது எப்படி, இந்த மார்க்கம் ஏன் தேவை (How to spread Christianity in India, Why need this margam ” ஆகிய தலைப்புகளில் வரும் மார்ச் 14ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பல்கலைக்கழக சேப்பாக்க வளாகத்தில் பிற்பகல் 2 முதல் 5 மணி வரை நடத்தப்படவிருந்த இந்நிகழ்வில் பொறியாளர் சிவக்குமார் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார்.

இதற்கு கல்வியாளர்கள், பேராசிரியர்கள், உள்ளிட்ட பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பின.  பாரம்பரியமிக்க சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மதத்தை பரப்புவது குறித்த கருத்தரங்கம் நடத்தப்படுவது மாணவர்கள் மத்தியில் தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பரவின. இந்த நிகழ்ச்சியை ரத்து செய்து, அதற்கு ஏற்பாடு செய்தவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.சென்னை பல்கலைகழகத்தில் மதம் தொடர்பான கருத்தரங்கம் - ரத்து செய்த நிர்வாகம்மேலும் இதுதொடர்பாக விளக்கம் கேட்டு சென்னை பல்கலைக்கழகத்துக்கு ஆளுநர் மாளிகை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டதால் விவகாரம் சர்ச்சையானது. இதற்கு விளக்கம் அளித்து சென்னை பல்கலைக்கழக பதிவாளர் ஏழுமலை ஆளுநரின் தனிச் செயலருக்கு அனுப்பிய கடிதத்தில், இந்த சொற்பொழிவிற்கு பல்கலைக்கழகத்திடம் முறையான அனுமதி பெறப்படவில்லை. எனவே, இந்த நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறு சம்மந்தப்பட்ட துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், துறை தலைவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், பதிலளித்தார்.

தொடர்ந்து நிர்வாக காரணங்களுக்காக சுப்ரமணிய ஐயர் அறக்கட்டளை சொற்பொழிவு ரத்து செய்யப்படுவதாக தொல்லியல் துறை தலைவர் சவுந்திரராஜன் அறிவிப்பு வெளியிட்டு, நிகழ்ச்சி ஏற்பாட்டு செய்ததற்கான நோக்கம் தொடர்பான விளக்கக் கடிதத்தை பல்கலைக்கழக பதிவாளருக்கு வழங்கியுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதிகளாக இருவர் பதவியேற்பு

MUST READ