Homeசெய்திகள்குடிநீருடன் கழிவு நீர் கலப்பு : 2 பேர் உயிரிழப்பு !

குடிநீருடன் கழிவு நீர் கலப்பு : 2 பேர் உயிரிழப்பு !

-

குடிநீரில் கழிவுநீர்? 2 பேர் உயிரிழப்புபல்லாவரம் அருகே குடிநீரில் கழிவு நீர் கலந்ததால் காமராஜ் நகர், மலை மேடு பகுதியினர் 28 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர். சிகிச்சைக்கு அழைத்துவரப்பட்ட 2 நபர் பலி.

தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம் 13 வார்டு காமராஜ நகர், மற்றும் கண்டோன்மெண்ட் பகுதி என சுற்றுவட்டத்தை சேர்ந்தவர்கள் கடும் வயிற்றுப்போக்கு வாந்தி காரணமாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு 28 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்,
இந்த நிலையில் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்படட் திரிவேதி கிருஷ்ணன்(54) என்பவர் வரும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். சிகிச்சை பலனின்றி மோகராஜ் தற்போது உயிரிழந்திருக்கிறார்.

மலைமேடு பகுதியில் கழிவுநீர் கலந்துவந்த குடிநீரை பருகியதால் பாதிப்பு என மக்கள் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தகவல் அறிந்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் சீ.பாலச்சந்தர் ஆகியோர் பாதிப்பு ஏற்பட்ட பகுதி மற்றும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளை நேரில் பார்வையிட்டு சிகிச்சை அளிக்க உத்திரவிட்டுள்ளனர்.

பாஜகவின் தேசிய தலைவராகிறார் தேவேந்திர ஃபட்னாவிஸ்..? குறுக்கே நிற்கும் குஜராத் பெண்மணி

 

MUST READ