Homeசெய்திகள்சென்னைகணவர் உயிரிழந்த பின் மறுமணம் செய்துகொண்ட மனைவிக்கு சொத்தில் பங்கு! - இந்து திருமணச் சட்டம்...

கணவர் உயிரிழந்த பின் மறுமணம் செய்துகொண்ட மனைவிக்கு சொத்தில் பங்கு! – இந்து திருமணச் சட்டம் 1955

-

மறுமணம் செய்துகொண்டாலும் இறந்தபோன கணவரின் சொத்தில் பெண்களுக்கு பங்கு பெற உரிமை உண்டு என சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவையைச் சேர்ந்த பெண் ஒருவர் தாக்கல் செய்திருந்த வழக்கில்,கடந்த 2013-ம் ஆண்டு மறைந்த தனது முதல் கணவரின் சொத்துக்களில் பாகப்பிரிவினை கேட்டு கோவை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தததாக தெரிவித்திருந்தார். சில சொத்துகளை சேர்ந்து வாங்கியதாகவும்,ஒரு சொத்து கணவர் தந்தையின் பரம்பரை சொத்து என்றும் அது இன்னும் பிரிக்கப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தார் .

இந்நிலையில் தனது கணவர் இறந்த பின்பு இரண்டாம் திருமணம் செய்ததன் அடிப்படையில் தான் சொத்தில் உரிமை கோர முடியாது என வாரிசுரிமையில் இருந்து தகுதி நீக்கம் செய்தது விசாரணை நீதமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும், எனவே விசாரணை நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து தனக்கும் சொத்தில் பங்கு தர உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த உத்தரவின் மீதான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த R. சுப்ரமணியன், C. குமரப்பன் அடங்கிய அமர்வு இந்து வாரிசுரிமை சட்டத்தின் அடிப்படையில் அந்த பெண்ணிற்கு கணவரின் சொத்தில் உரிமை உண்டு, மறுமணம் செய்து கொண்டாலும், இறந்த கணவரின் விதவையாக சொத்தில் உரிமை கோர முடியாது என்ற விசாரனை நீதிமன்றத்தின் முடிவு சரியானது அல்ல என தீர்ப்பளித்துள்ளனர்.

சம்மந்தப்பட்ட பெண்மறுமணம் செய்து கொண்டதன் காரணமாக இறந்த கணவரின் சொத்தை பெறுவதற்கு தகுதியற்றவர் என தீர்ப்பளிக்கப்பட்ட விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளனர்.

இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956ல், விதவைகள், கணவரின் சொத்துக்களைப் பெறுவதற்குத் தகுதியற்றவர்கள் அல்லது மறுமணத்தின் போது கணவரின் சொத்தில் பங்கு பெற மாட்டார்கள் என்பதை உறுதி செய்யும் விதி இல்லை என்றும் சுட்டிக்காட்டினர்.

கோயிலுக்குள் கடவுள்… இங்கே நுழைந்தால் அம்பேத்கர்… திருமா சொல்லும் சூத்திரம்

MUST READ