Homeசெய்திகள்சென்னைமாஜிஸ்திட்ரேட் நீதிமன்றத்தில் 140 வாய்தா, பத்து ஆண்டு விசாரணை - நீண்ட சட்டபோரட்டதிற்கு பிறகு விடுதலையான...

மாஜிஸ்திட்ரேட் நீதிமன்றத்தில் 140 வாய்தா, பத்து ஆண்டு விசாரணை – நீண்ட சட்டபோரட்டதிற்கு பிறகு விடுதலையான சமூக ஆர்வலர் 

-

 மாஜிஸ்திட்ரேட் நீதிமன்றத்தில் 140 வாய்தா, பத்து ஆண்டு விசாரணை - நீண்ட சட்டபோரட்டதிற்கு பிறகு விடுதலையான சமூக ஆர்வலர் மாநில தகவல் ஆணைய விசாரணையின் போது நாற்காலியில் அமர்ந்து பதில் அளித்ததால் தொரப்பட்ட வழக்கில் 140 வாய்தா, பத்து ஆண்டுகள் விசாரணைக்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார் பிரபல சமூக ஆர்வலரும், சட்ட பஞ்சாயத்து இயக்க நிறுவனருமான சிவஇளங்கோ.

இந்த வழக்கின் பின்ண்ணி என்ன? என்ன தகவல் கேட்டிருந்தார்? 

கடந்த 2012 ம் ஆண்டு, அப்போதைய அ.தி.மு.க ஆட்சியில் ‘நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனை’ என இந்தியாவில் உள்ள பல பத்திரிகைகளில் முழுப்பக்க விளம்பரங்களைக் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த விளம்பரங்களுக்குச் செலவிடப்பட்ட தொகை எவ்வளவு, இந்தியாவில் எந்தெந்தப் பத்திரிகைகளில் எவ்வளவு விளம்பரங்கள் தரப்பட்டன என்றும், கடந்த 15 ஆண்டுகளில் தமிழக அரசு பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய, மக்கள் வரிப்பணத்திலிருந்து செலவிடப்பட்ட தொகை எவ்வளவு என்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் வழியாக செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையிடம் சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் சிவஇளங்கோ தகவல் கேட்டிருந்தார்.

மாஜிஸ்திட்ரேட் நீதிமன்றத்தில் 140 வாய்தா, பத்து ஆண்டு விசாரணை - நீண்ட சட்டபோரட்டதிற்கு பிறகு விடுதலையான சமூக ஆர்வலர் தமிழக அரசு தகவல் தராததால் ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு கடந்த 2015 அன்று மாநில தகவல் ஆணையத்தில் தொடர்ந்திருந்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. இந்த மனு மீதான விசாரணை , தலைமைத் தகவல் ஆணையர் கே.எஸ்.ஸ்ரீபதி மற்றும் தகவல் ஆணையர். எஸ்.எஃப்.அக்பர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. விசாணையின்போது, நாற்காலியில் அமர்ந்தவாரே பார்ட்டி இன் பர்சனாக சிவ இளங்கோ வாதிட்டுள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தலைமைத் தகவல் ஆணையர் கே.எஸ். ஸ்ரீபதி, மனுதாரர் நின்று கொண்டுதான் பேச வேண்டும்’ என்று கூற, சிவ இளங்கோ அதனை மறுத்திருக்கிறார்.

இதனால் பிரச்சனை ஏற்பட , தகவல் ஆணையம் சார்பில், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் சிவ இளங்கோ மீது புகார் கொடுக்கப்பட்டதால், கைது செய்யப்பட்டு, மூன்று நாட்கள் புழல் சிறையிலடைக்கப்பட்டுள்ளார். பின்னர் இந்த வழக்கு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள 18 வது பெருநகரக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது சிவ இளங்கோ தாமாகவே இந்த வழக்கில் ஆஜராகி வாதாடி இருகிறார்.

இந்நிலையில், 10 ஆண்டுகள் வழக்கு விசாரணை, 140 வாய்தா என்று பல்வேறு திருப்புமுனைகளுடன், சட்ட பஞ்சாயத்து இயக்க நிறுவனர் சிவ இளங்கோவை  சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. வழக்கை அரசு தரப்பில் சரியாக நிருபிக்க முடியவில்லை என்பதால் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டதாக உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாஜிஸ்திட்ரேட் நீதிமன்றத்தில் 140 வாய்தா, பத்து ஆண்டு விசாரணை - நீண்ட சட்டபோரட்டதிற்கு பிறகு விடுதலையான சமூக ஆர்வலர் 
இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டாலும் தான் கேட்ட தகவல் இன்னும் கிடைக்கவில்லை என்கிறார் சிவ.இளங்கோ.

தகவல் ஆணையத்திற்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றாலும் சைதாப்பட்டை நீதிமன்ற வழக்கு விசாரணையின்போது நாற்காலியில் அமர்ந்தே வாதிட்டார் சிவ.இளங்கோ. அதற்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ