சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ரூ.58,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறு முகத்தில் இருந்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி அன்று தங்கம் விலை சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது. பின்னர் அதன் விலை படிப்படியாக குறைந்த நிலையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.58,840-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ரூ.58 ஆயிரத்து 920-க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ரூ.7 ஆயிரத்து, 365-க்கு வர்த்தகமாகிறது. இதனிடையே வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் ரூ.105-க்கும், பார் வெள்ளி கிலோவுக்கு ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.