அம்பத்தூர் பகுதி முகப்பேர் அருகே பெருமாள் கோவிலில் தமிழக வெற்றி கழக மாநாட்டிற்கான சிறப்பு பூஜை. நடிகர் தாடி பாலாஜி பேட்டி
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு அக் 27ல் விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.. பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையிலான கட்சி நிர்வாகிகள் மாநாட்டிற்கான பணிகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.. இந்த நிலையில் தவெக முதல் மாநாடு வெற்றி பெற வேண்டி சென்னை கிழக்கு மாவட்டம் தலைவர் பால முருகன் தலைமையில் அம்பத்தூர் அடுத்த முகப்பேர் சந்தன சீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிப்பட்டனர்.
இதில் நடிகர் தாடி பாலாஜி கலந்து கொண்டு வழிப்பட்டப்பின் 500 பேருக்கு அன்னதானம் வழங்கினர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் தாடி பாலாஜி, புரட்டாசி சனிக்கிழமையையொட்டி தமிழக வெற்றி கழக கிழக்கு மாவட்டம் சார்பில் மாநாடு வெற்றி பெற சிறப்பு பூஜை நடைபெற்றது.
நேற்று தளபதி படத்திற்கான பூஜை இன்று மாநாட்டின் தலைவர் தளபதிக்காக நடைபெறும் பூஜையில் பங்கேற்றது மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் மாநாட்டிற்காக என்னை பணியாற்ற கூறி எனக்கு ஒரு வாய்ப்பை அளித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார். நடிகராக அவருடன் பணியாற்றியுள்ளேன், ஆனால் கட்சியில் தற்போது தொண்டர்களுடன் சேர்ந்து பணியாற்றி தலைவர் எதிர்ப்பார்ப்பதை செய்து முடிப்பேன் என தெரிவித்தார்.
தொடர்ந்து விஜயின் கடைசி படம் இது தான் கருத்துக்கு தண்ணீரில் தான் எழுத வேண்டும் என பாஜக முத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனத்திற்கு பதிலளித்த அவர், பாண்டிசேரியில் இருந்ததால் தண்ணீரில் எழுத வேண்டும் என கூறுகிறார்கள். ஒருவர் வந்து எந்த பணியும் செய்வதற்கு முன்பே பேசுகிறார்கள், அதுவே எங்களுக்கு சக்தி தான். அவர் வந்து என்ன செய்கிறார் என 2027ல் பார்த்துவிட்டு பின் பேசட்டும் என தெரிவித்தார்.
இந்த கட்சியில் பணியாற்றிவது ஒரே ஒரு முகத்திற்காக தான் அது தளபதி விஜய் அவர்களுக்கு தான்.. முதல் கட்சியின் மாநாட்டிற்கு ராணுவ கட்டுப்பாடுடன் எந்த கட்சியும் நடந்ததில்லை, முதல் மாநாட்டிற்கே கட்சி தலைவர் அறிவுறுத்தி இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.