Homeசெய்திகள்சென்னைபுயல் சின்னம் எதிரொலி : 9 துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

புயல் சின்னம் எதிரொலி : 9 துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

-

- Advertisement -

வங்கக்கடலில் புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் 9 துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலை 5.30 மணி அளவில் புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு ஃபெங்கல் என பெயரிடப்பட்டு உள்ளது. தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தெற்கு தென்கிழக்கு திசையில் 550 கி.மீ தொலைவிலும், நாகையிலிருந்து தென்கிழக்கு திசையில் 370 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 13 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.

இந்த நிலையில், ஃபெங்கல் புயல் காரணமாக தமிழகத்தில் 9 துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகை, பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

MUST READ