சென்னையில் கடந்த 4ஆம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வாயில் அருகே இரண்டு கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் மாநில கல்லூரி மாணவர் சுந்தர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
மாணவர்கள் மோதலில் மாநில கல்லூரி மாணவர் இறந்ததை அடுத்து ரயில் நிலையங்களில் போலீஸ் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் சட்டம் ஒழுங்கு போலீஸ், ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இணைந்து கண்காணிக்கின்றனர்.
சென்ட்ரலில் கல்லூரி மாணவர்களிடையே மோதல்… மாநில கல்லூரி மாணவர் உயிரிழப்பு!
ரயில்களில் இருந்து இறங்கி வரும் மாணவர்களின் அடையாள அட்டைகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மாணவர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் மோதல் ஏற்படாமல் தடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர். மாணவர் இறந்ததை அடுத்து மின்சார ரயில் வழித்தடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாநில கல்லூரி, சென்ட்ரல் ரயில் நிலையம், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.