பிஎஸ்பி தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்டுள்ள சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு விசிக தலைவர் திருமாவளவன் வருகை தந்துள்ளார். அங்கு பிரேத பரிசோதனை முடித்து வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இதனிடையே, சட்டம்- ஒழுங்கை காரணம் காட்டி ஆம்ஸ்ட்ராங் உடலை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்ல காவல்துறை அனுமதி மறுத்ததால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை, உண்மையான குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும்.
8 பேர் சரணடைந்து விட்டால் புலன் விசாரணை காவல்துறை நிறுத்தி விடக்கூடாது எனவும் ஆம்ஸ்ட்ராங் போன்ற தலைவர்களுக்கு காவல்துறை உரிய பாதுகாப்பு அளித்திருக்க வேண்டும். உண்மை குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தக்க தண்டனையை பெற்றுத் தர வேண்டும் என திருமாவளவன் கூறியுள்ளார்.