Homeசெய்திகள்சென்னைதமிழக அரசு ட்ரெய்லர் லாரி உரிமையாளர்கள், ஓட்டுனர் பிரச்சனையை தீர்க்க  கோரிக்கை…!

தமிழக அரசு ட்ரெய்லர் லாரி உரிமையாளர்கள், ஓட்டுனர் பிரச்சனையை தீர்க்க  கோரிக்கை…!

-

சென்னை துறைமுக  ட்ரெய்லர் டாரஸ்  ஓட்டுனர் சங்கத்தின் சார்பில் லாரி ஓட்டுனர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. திருவொற்றியூரை அடுத்த எர்ணாவூர் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 1000க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் பங்கேற்று அடையாள அட்டையை பெற்றனர். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த ட்ரெய்லர் உரிமையாளர் சங்கத்தினர்.

தமிழக அரசு ட்ரெய்லர் லாரி உரிமையாளர்கள், ஓட்டுனர் பிரச்சனையை தீர்க்க  கோரிக்கை…!டிரைவர் அசோசியன் தொடங்கப்பட்டு  1500 பேர் கொண்ட குழுவானது லாரி  ஓட்டுனர்கள் அடிப்படை உரிமைகளை மீட்டு எடுப்பதற்காக ஓட்டுனர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டதாக தெரிவித்தனர்.

கண்டெய்னர் பெட்டிகளில் அதிக பாரங்கள்  சுமக்கக்கூடிய வாகன ஓட்டிகள் துறைமுகத்தில் உள்ளே செல்வதற்கு அச்சப்படுகின்றனர். சென்னை துறைமுகம் காட்டுப்பள்ளி துறைமுகங்கள்  போதிய எண்ணிக்கை கொண்ட ஆப்பரேட்டர்கள் வைத்துள்ள காரணத்தினாலும் முறைப்படி படித்து பயிற்சி அனுபவம் இல்லாமல் கிரேன் ஆப்பரேட்டர்கள் இயக்குவதால் பல விபத்துகளும் ஏற்படுகின்றன.

மேலும் பொருட்கள் இல்லாமல் காலியான கண்டெய்னர் பெட்டிகளை ஏற்றி செல்ல லாரிகள்  உள்ளே வரும்போதும் கிரேன் ஆபரேட்டர்களால் விபத்துக்கள் ஏற்படுகின்றன என குற்றம் சாட்டினர். துறைமுகத்தில் ஏற்படும் காலதாமதத்தால் சாலைகளில் நீண்ட வரிசையில் கண்டெய்னர் லாரிகள் நிற்கக்கூடிய சூழல் உருவாகியுள்ளன.

துறைமுக நிர்வாகங்கள் முறையான பயிற்சி அனுபவிக்க ஆப்ரேட்டர்களை நியமித்து சரியான நேரத்தில் கண்டெய்னர் பெட்டிகளை ஏற்றுமதி இறக்குமதிக்காக வேலையை முறைப்படி செய்ய வேண்டும்  என கோரிக்கை வைத்துள்ளனர்.

இரவு பகல் என இரண்டு வேளையும் பணி செய்யும் ஆப்ரேட்டர்கள் பணி சுமையினாலும் திறமையற்ற பயிற்சி நாளும் லாரி ஓட்டுனர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். கிரேன் ஆப்ரேட்டர் முறையாக இயக்காததால் காட்டுப்பள்ளி   துறைமுகத்தில் ஒரு ஓட்டுனர் உயிரிழந்து 50 லட்ச ரூபாய் நிவாரணம் வாங்கி கொடுத்ததாக தெரிவித்துள்ளனர்.

துறைமுகத்தால் ஏற்படும் தாமதத்தினால் வரிசையில் சாலையில் நிற்கும் ஓட்டுநர்களுக்கு உணவு இல்லாமல் இயற்கை உபாதைகளை கழிக்க கழிவறை இல்லாமல் சாலையிலே காத்திருப்பதாகவும் இதில் போக்குவரத்து போலீசார் ஆன்லைன் வழக்கைகள் பதிவு செய்வதால் உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதால் துறைமுகத்தினால் ஏற்படும் தவற்றை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

துறைமுகத்திற்கு உள்ளே வரும் கப்பல்களை குறித்து நேரத்தில் வெளியே அனுப்பாவிட்டால் ‌ அபராதம் விதிக்கப்படும் என்பதனால் உடனடியாக கப்பலில் இருந்து கண்டெய்னர் பெட்டிகளை இறக்கும் முனைப்பில் செயல்படுகிறார்கள் தவிர லாரிகளில் ஏற்றுவதற்கு இவர்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை.

தமிழக அரசு ட்ரெய்லர் லாரி உரிமையாளர்கள், ஓட்டுனர் பிரச்சனையை தீர்க்க  கோரிக்கை…!முறைப்படி பயிற்சி இல்லாத அனுபவம் இல்லாத ஆபரேட்டர்கள் நியமித்து துறைமுகங்கள் நிர்வாக திறமை இல்லாமல் செயல்படுகிறது என குற்றம் சாட்டினர். தமிழக அரசு தலையிட்டு ட்ரெய்லர் லாரி உரிமையாளர்கள் ஓட்டுனர் பிரச்சனையை துறைமுக நிர்வாகத்துடன் பேசி தீர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

MUST READ