Homeசெய்திகள்சென்னைமின்சாரம் தாக்கி உயிரிழந்த சக்திவேல் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்து தரப்படும்...

மின்சாரம் தாக்கி உயிரிழந்த சக்திவேல் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் – அமைச்சர் மா சுப்பிரமணியன் உறுதி

-

மின்சாரம் தாக்கி உயிரிழந்த சக்திவேல் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் - அமைச்சர் மா சுப்பிரமணியன் உறுதிஃபெஞ்சல் புயலில் மழை நீரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த வேளச்சேரியை சேர்ந்த சக்திவேல் குடும்பத்தாருக்கு அரசு சார்பில் தேவையான உதவிகள் செய்து தரப்படும் என அமைச்சர் மா சுப்பிரமணியன் உறுதியளித்துள்ளார்.

சென்னை வேளச்சேரியில் நேற்று முன்தினம் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சக்திவேல் குடும்பத்தினருக்கு , தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நிவாரண உதவியை சக்திவேலின் மனைவி பரமேஸ்வரியை நேரில் சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா சுப்பிரமணியன், மின் விபத்தில் உயிரிழந்த சக்திவேலின் மகள் கல்வி செலவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது முறையாக கண்காணிக்கப்படும் என தெரிவித்த அவர், மாணவியின் உயர்கல்வி, மற்றும் சக்திவேல் மனைவி பரமேஸ்வரிக்கான நிதியுதவி உள்ளிட்டவை அரசின் திட்டங்கள் மூலம் நிறைவேற்றித்தரப்படும் என உறுதியளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், வடகிழக்கு பருவ மழை தொடங்கிய உடன், கடந்த அக்டோபர் 14 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் மருத்துவ சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், மொத்தம் 52,421 முகாம்கள் மூலம் இதுவரை 28 லட்சத்து 42 ஆயிரத்து 528 பேர் பயனடைந்துள்ளதாக தெரிவித்தார்.

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம், திருவண்ணாமலை, தருமபுரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் தொடர்ந்து மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என தெரிவித்தார்.

ஓராயிரம் அண்ணாமலை வந்தாலும் திராவிட மாடல் அரசு தான் கோலோச்சும் – அமைச்சர் சேகர்பாபு

MUST READ