- Advertisement -
கன மழை காரணமாக வானிலை மையம் ரெட் அலர்ட் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தும் மற்றும் ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதற்கு அறிக்கை விடப்பட்டிருந்தது.
மேலும் மெட்ரோ ரயில்கள் கூடுதலாக இயக்க அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் திருவொற்றியூரில் இருந்து விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயில்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் பயணிகள் அதிக அளவில் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகின்றன.
எப்பொழுதுமே மெட்ரோ ரயில்களில் அதிக அளவில் கூட்ட நெரிசலால் நிரம்பி வழியும் நிலையில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படுவதாலும் ஐடி நிறுவனங்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதால் மெட்ரோ ரயில் பயணிகள் இல்லாமல் ஒரு சில பயணிகளுடன் இயக்கப்படுகிறது.