ஆளுநர்களுக்கு நல்ல இதயம் இருக்கிறது – தமிழிசை
சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவமனையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், “ஆளுநர்களுக்கு வாய் இருக்கிறதா, காது இருக்கிறதா என எனக்கு தெரியாது. ஆனால் ஆளுநர்களுக்கு நல்ல இதயம் இருக்க்கிறது. எய்ம்ஸ் என்பது 5 அல்லது 7 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கிடையாது. பிரமாண்டமாக கட்டப்படவுள்ளது. அதனால் கட்ட காலதாமதம் ஆகலாம். மருத்துவமனைகள் செங்கற்களால் கட்டப்படுவதில்லை. இதயத்தால் கட்டப்படுகிறது. யோகா செய்தால் மருத்துவமனைக்கே வர தேவையில்லை. தயவு செய்து யோகா செய்யுங்கள். சிறு தானியங்களை நிறைய சாப்பிடுங்கள்.
நீட்டை ஆதரித்து சில நேரங்களில் பேசும்போது என்னை கிண்டல் செய்வர். ஆனால் ஒரு அரியர்கூட இல்லாமல் மருத்துவ படிப்பை முடித்தவர் நான். மக்களுக்கு சேவை செய்வதே மனிதனின் நோக்கமாக இருக்க வேண்டும் என்ற சிந்தனையோடு வாழ்பவள். எனக்கும் மருத்துவமனைக்கும் 35 ஆண்டுகால தொடர்பு இருக்கிறது. அனைவருடைய ரத்தமும் சிவப்புதான். இந்தியாவின் ரத்தம் தேசப்பற்றோடு உள்ள ரத்தம்” என்றார்.