மின்சாரம் பாய்ந்து பிரிட்ஜ் வெடித்ததில் பயங்கர சம்பவம்
மின்சாரம் பாய்ந்து பிரிட்ஜ் வெடித்ததில் மூதாட்டிக்கு பயங்கர தீக்காயம் மற்றும் இரண்டு மகன்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
சென்னையைச் சேர்ந்த அம்பத்தூர் கருக்கு பாரத் நகரில் வாழ்ந்து வருபவர் கண்ணகி. இவருக்க வயது 50. இவர் வீட்டில் அதிகாலையில் பிரிட்ஜ் வெடித்ததில் கண்ணகிக்கு பலத்த தீக்காயம் அடைந்தார். இவரை புதுப்பேட்டை தீயணைப்பு மீட்பு படையினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் முதல் உதவி சிகிச்சைக்காக அரசு கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
பிரிட்ஜ் வெடித்து வீடு முழுவதும் தீ பற்றிய நிலையில் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். கண்ணகி தனது இரு மகன்கள் உடன் வாடகை வீட்டில் வாழ்ந்து வருவதாகவும். அவரது கணவர் காவல் துறையில் உதவி ஆய்வாளர் பணி செய்து ஓய்வு பெற்று இறந்துவிட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இன்று வீட்டின் பிரிட்ஜ்ஜை திறந்த பொழுது குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக பாதிக்கப்பட்ட கண்ணகிக்கு உடம்பில் தீக்காயம் ஏற்பட்டதாகவும், வீட்டில் தீ பற்றிய சூழ்நிலையில் அவரது இரு மகன்களுக்கும் லேசான மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இச்சம்பவம் குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு நேரில் விரைந்து சென்று அம்பத்தூர் தீயணைப்பு மீட்பு துறையினர் விசாரணை செய்தபோது அதிகாலை வேளையில் உயர் மின்னழுத்தம் காரணமாக மின்கசிவு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதன் தொடர்பாக அம்பத்தூர் போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..