Homeசெய்திகள்சென்னைவிலைவாசியை உயர்த்தும் மத்திய அரசை கண்டித்து சிபிஐஎம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

விலைவாசியை உயர்த்தும் மத்திய அரசை கண்டித்து சிபிஐஎம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

-

விலைவாசியை உயர்த்தும் மத்திய அரசை கண்டித்து சிபிஐஎம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆவடி சிபிஐஎம் கட்சியினர் மத்திய அரசு விலைவாசி உயர்வை அதிகப்படுத்தி கொண்டிருப்பதை கண்டித்து திருமுல்லைவாயில் இந்தியன் வங்கியை முற்றுகையிட்டு 300க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விலைவாசியை உயர்த்தும் மத்திய அரசை கண்டித்து சிபிஐஎம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் பகுதியில் இந்தியன் வங்கி வாசலில் மாமன்ற உறுப்பினர் ஜான் அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் கலந்துகொண்டு சென்னையிலிருந்து திருவள்ளூர் செல்லக்கூடிய நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ள இந்தியன் வங்கியின் வாசலில் மத்திய அரசை கண்டித்து பல்வேறு பதாகைகளை கையில் ஏந்தி,

மத்திய அரசு பெட்ரோல் விலையை குறைத்திடு!

டீசல் விலையை குறைத்து சிலிண்டர் விலையை குறைத்திடு!

இந்தியா முழுவதும் வேலையில்லாமல் தவிக்கும் 6 கோடிக்கும் மேலான பட்டதாரிகளுக்கு உடனடியாக வேலை வழங்கிடு!

மதுரையில் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை ஒற்றை செங்கலுடன் உடனடியாக தொடங்கி விடு!

தமிழ்நாட்டிற்கு மோடி அரசு இழைக்கும் வஞ்சகத்தை தவிர்த்து விடு!

அதேபோல் மானியத்திற்காக பட்ஜெட் ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விலைவாசியை உயர்த்தும் மத்திய அரசை கண்டித்து சிபிஐஎம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

அப்பொழுது திடீரென இந்தியன் வங்கி வாசலில் 300க்கும் மேற்பட்ட சி.பி.ஐ எம் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்பு அனைத்து சிபிஎம் கட்சினயிரையும் கைது செய்த காவல்துறையினர் தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

MUST READ