சென்னை வண்ணாரப்பேட்டையில் சர்ச்சில் நடைபெற்ற காதலன் திருமணத்தை நிறுத்த வந்த காதலியால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்னை குண்டு கட்டாக ஆட்டோவில் ஏற்ற முயன்ற போது அடம்பிடித்து ஏற மறுத்ததால் கால்களை உள்ளே மடக்கி அனுப்பிய போலீஸ்.
கடலூர் மாவட்டம் வள்ளி மதுரம் பகுதியை சேர்ந்த 28 வயதுடைய
பிரியதர்ஷினி இவர் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தனியார் போன் தயாரிப்பு தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.
அதே நிறுவனத்தில் நாகர் கோவில் நித்திரை விளை நெய்த மங்களத்தை சேர்ந்த 27 வயதுடைய லிஜீன் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இரண்டரை ஆண்டுகளாக காதலர்களாக பழகி வந்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து கடந்த 2023ஆம் ஆண்டு பாரிமுனையில் உள்ள
அந்தோணியார் தேவாலயத்தில் ஜனவரி மாதம் நண்பர்கள் முன்னிலையில் மோதிரம் மாத்திக் கொண்டு மாலை அணிவித்து திருமணம் செய்து கொண்டு தாம்பரம் சேலையூரில் உள்ள ஒரு வீட்டில் வாடகை எடுத்து கணவன் மனைவியாக வாழ்ந்து வந்ததாகவும் அதில் இரு முறை கர்பம் தரித்த பிரியதர்ஷினிக்கு லிஜீன் மாத்திரை வாங்கி கொடுத்து கர்ப்பத்தை கலைத்தாக கூறப்படுகிறது.
வேறு ஒரு பெண்ணிடம் லிஜீன் தொடர்பு இருப்பதாக கூறி செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பிரியதர்ஷினி புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில்
காதலன் லிஜீன் என்பவருக்கும் வேறு ஒரு பெண்ணிற்கு திருமணம் நடைபெருவதை அறிந்த பிரியதர்ஷினி இதுகுறித்து வழக்கறிஞர்கள் மூலம் தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். புகாரி பேரில் மணமகன் வீட்டார் மணமகள் வீட்டாரை போலீசார் அழைத்து பேசியுள்ளனர்.
ஆதாரம் இருந்தால் திருமணத்தை நிறுத்துவதாக மணமகன் வீட்டார் போலீசாரிடம் தெரிவித்தனர். இதனையடுத்து வண்ணாரப்பேட்டை கிறிஸ்துவ தேவாலயத்திற்கு சென்ற பிரியதர்ஷினி கூச்சலிட்டு திருமணத்தை நிறுத்த முயன்றார். இதனையடுத்து மாப்பிள்ளை வீட்டார் பிரியதர்ஷினியை வெளியே போகும் மாறு கூறியதால் அடம் பிடித்து அங்கு வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தண்டையார்பேட்டை போலீசார் பிரியதர்ஷினியை ஆட்டோவில் ஏறும்படி கூறினார். அடம்பிடித்து ஆட்டோவில் ஏற மறுத்த பிரியதர்ஷினி வலுக்கட்டாயமாக பெண் காவலர்கள் முன்னிலையில் பிரியதர்ஷினி கால்களை உள்ளே மடக்கி வைத்து ஆட்டோவை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லாமல் தண்டையார்பேட்டையில் உள்ள சின்ன ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரியதர்ஷினி கூச்சலிட்டதால் மேலும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
நியூஸ் 18 தொலைக்காட்சி சார்பில் நடிகர் தனுஷுக்கு அம்ரித் ரத்னா விருது!