Homeசெய்திகள்சென்னைசென்னையில் ரூ.60 ஆயிரத்தை கடந்த ஆபரணத்தங்கம் விலை!

சென்னையில் ரூ.60 ஆயிரத்தை கடந்த ஆபரணத்தங்கம் விலை!

-

- Advertisement -

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை  புதிய உச்சமாக சவரன் 60 ஆயிரத்தை கடந்து விற்பனையாகிறது.

சென்னையில் தங்கம் விலை - 17 அக்டோபர் 2024

சென்னையில் கடந்த ஒரு வார காலமாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டு வந்தது. நேற்று தங்கம் விலையில் மாற்றம் இன்றி சவரன் ரூ.59,600க்கு விற்பனையானது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து சவரன் ரூ.60 ஆயிரத்தை கடந்தது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ. சவரனுக்கு 80!

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து 60,200 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 75 ரூபாய் உயர்ந்து 7,525 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.104-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ஒரு லட்சத்து 4 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.

MUST READ