சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து, ஒரு சவரன் ரூ.56,240-க்கு வர்த்தகமாகிறது.
சென்னையில் கடந்த 2 நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் இன்றி சவரன் ரூ.56,800-க்கு விற்பனையாகி வந்தது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் நகை வாங்குவது சிமமான காரியமாக மாறியது. இந்த நிலையில், இன்று ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.560 குறைந்து விற்பனையாகிறது.
சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து, ஒரு சவரன் ரூ.56,240-க்கு விற்பனையாகிறது. இதேபோல், ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.70 வரை குறைந்து, கிராம் ரூ.7,030-க்கு வர்த்தகமாகிறது.
சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து, ரூ.100க்கு விற்பனையாகிறது. பார் வெள்ளி கிலோவுக்கு 2 ஆயிரம் ரூபாய் குறைந்து, ஒரு கிலோ ஒரு லட்சம் ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.