Homeசெய்திகள்சென்னைகாவல் துறை மீது நம்பிக்கை இழந்த திருமாவளவன்- வேங்கை வயல் வழக்கு சிபிஐயிடம் ஒப்படையுங்கள்!

காவல் துறை மீது நம்பிக்கை இழந்த திருமாவளவன்- வேங்கை வயல் வழக்கு சிபிஐயிடம் ஒப்படையுங்கள்!

-

- Advertisement -

வேங்கை வயல் விவகாரத்தில் தமிழக காவல்துறையின் மீது நம்பிக்கை இல்லாமல் சிபிஐ விசாரணை கோருகிறோம்.

காவல் துறை மீது நம்பிக்கை இழந்த திருமாவளவன்- வேங்கை வயல் வழக்கு சிபிஐயிடம் ஒப்படையுங்கள்!சிபிசிஐடி வழங்கிய குற்றப் பத்திரிக்கையை தமிழக அரசு ஏற்க கூடாது எனவும் தற்போது குற்றப் பத்திரிக்கைகளில் போடப்பட்டுள்ள நபர்களை கைது செய்தால் கடுமையான எதிர்ப்புகளை சந்திக்க நேரிடும். இப்போதும் தலித் மக்கள் மீது அநீதிகள் நடைபெறுவது வேதனை அளிப்பதாக உள்ளது.

பெரியாருக்கு எதிராக விமர்சனம் செய்தால் அது அம்பேத்கருக்கு எதிரான விமர்சனமாக விசிக பார்க்கிறது எனவும் சீமானின் போக்கு மிக கவலை அளிக்கக்கூடியதாகவும் மிக ஆபத்தான அரசியலை சீமான் செய்து வருகிறார். திமுக அரசு சமூக நீதியின் பக்கம் நிற்கும் என்ற நம்பிக்கை இன்னும் எங்களுக்கு உள்ளது. என விடுதலை சிறுத்தகைள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேட்டி

சென்னை மூலக்கொத்தளத்தில் இந்தி எதிர்ப்பு போரில் உயிர்நீத்த நடராசன் மற்றும் தாளமுத்து ஆகியோரின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தொல்.திருவமாளவன் பேசியதாவது :-

தாய்தமிழ் காத்த போராளிகள் அனைவருக்கும் விசிக சார்பாக வீர வணக்கம்.1938 ஆம் ஆண்டு முதல் மொழி போர் பெரியார் தலைமையில் நடைபெற்றது. அப்போது நிறைய நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு மணிமண்டபம் கட்டிய முதல்வருக்கு விசிக சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களது தியாகம் இன்றும் போற்றப்பட்டு வருகிறது. இந்த நினைவிடம் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இரண்டாம் மொழி போரில் கோடம்பாக்கம் சிவலிங்கம், விராலிமலை சண்முகம் உள்ளிட்ட பத்து பேர் உயிரிழந்தனர். அவர்களது நினைவாகவும் இன்று அவர்களையும் நினைவு கூறுகிறோம் என தெரிவித்தார்.

தமிழ் மொழிக்கு ஆபத்தான காலத்தில் அனைவரும் ஒன்றிணைந்து போராடியதன் காரணமாக வட மாநிலத்தில் உள்ளவர்களால் இங்கே கால் ஊன்ற முடியவில்லை என கூறினார். பெரியார் சானாதானத்தை  ஒழிக்க அம்பேத்தகர் உடன் செயல்பட்டார். பெரியாரையும் அம்பேத்கரையே எதிர் எதிர் துருவத்தில் வைத்து பேசுவது அவரது கருத்துக்களை பின்பற்றுபவர்களை பிரிக்கக்கூடிய முயற்சியாக தான் உள்ளது. அம்பேத்கரை கருத்தியல் ரீதியாக ஆதரித்தவர் பெரியார் என தெரிவித்தார்.

அவர்களுக்கிடையே வேறுபாடு முரண்பாடுகளை உருவாக்க அவர்களை பின்பற்றக்கூடிய தோழர்களுக்கு சனாதான சூழ்ச்சி நடைபெற்று வருகிறது. அது இங்கே எடுப்படாது. பெரியாருக்கு எதிராக விமர்சனம் செய்தால் அது அம்பேத்கருக்கு எதிராக விமர்சனமாக இருக்கும் என விசிக பார்க்கிறது எனவும் ஒருபோதும் அதை வேடிக்கை பார்க்க மாட்டோம் எனவும் தெரிவித்தார்.

வேங்கை வயல் விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை ஏமாற்றம் அளித்து இருக்கிறது. அங்கு உள்ளே வழக்கமான காவல் துறையினர் விசாரிக்க கூடாது எனவும் சிறப்பு குழு ஆய்வு விசாரணை தேவை என நாங்கள் வைத்த கோரிக்கை ஏற்றதாழ இரண்டு ஆண்டு கால விசாரணையில் புகார் கொடுத்த நபர்கள் மீதே அந்த குற்றத்தை செய்தார்கள் என்று வழக்கு பதிவு செய்து இருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.

சிறப்பு நீதிமன்றம் குற்றப் பத்திரிகையை ஏற்கக்கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுக்கு விசிக வைக்கக்கூடிய கோரிக்கை. இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்தார். இந்த போக்கை கண்டித்து கிராம மக்கள் அறப்போராடத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அச்சுறுத்திய காவல்துறையினர் கைது செய்தனர். விடுதலை சிறுத்தை கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டு சிறையில் வைத்திருப்பது வன்மையாக கண்டிக்கிறது. திமுக அரசு சமூக நீதியின் பக்கம் நிற்கும் என்ற நம்பிக்கை இன்னும் எங்களுக்கு உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு இந்த அரசு துணையாக இருக்கும் என்று நம்புகிறோம் என தெரிவித்தார்.

காவல் துறையின் இந்த போக்கை சிபிசிஐடி தாக்கல் செய்திருக்க கூடிய குற்றப்பத்திரிக்கை தமிழக அரசு ஏற்கக் கூடாது. தமிழக அரசுக்கு விடுதலை சிறுத்தை கட்சிகள் கேட்டுக் கொள்கிறது. எப்படி இப்படி நடந்து இருக்கிறது என்று மிகுந்த அதிர்ச்சியாக உள்ளது முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என தெரிவித்தார். Whatsapp யில் ஏற்கனவே பகிரப்பட்ட ஆடியோக்கள் தான் இது. புதிதாக இல்லை டி என் ஏ பரிசோதனை மூலமாக இது உறுதி செய்யப்பட்ட படவில்லை என தெரிவித்தார்.

சீமானின் போக்கு மிக கவலை அளிக்க கூடியதாக அதிர்ச்சி அளிக்க கூடியதாக உள்ளது. ஏன் இப்படி செயல்படுகிறார் என விளங்கவில்லை. அவரை யாரை இப்படி உசுப்பி விடுகிறார் என்பதும் தெரியவில்லை. தமிழக மக்களின் நேர் எதிராக அவரின் செயல்பாடுகள் உள்ளது. மிக ஆபத்தான அரசியலை செய்து வருகிறார். இது அவருக்கும் நல்லதல்ல தமிழக மக்களுக்கும் நல்லதல்ல அவர்கள் சுற்றி இருக்கும் தோழர்கள் கவனமாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

உணர்ச்சி மிகுதியில் அவர் அனைத்தையும் அணுகுகிறார் அவரின் வாதம் குதர்க்கமாக உள்ளது. ஜனநாயக அணுக முறை கிடையாது. அவரின் கருத்துகள் கவலை அளிப்பதாக உள்ளது. அவரின் போக்குகள் உள்ளது என சீமான் குறித்தான கேள்விக்கு பதில் அளித்தார்.

தலித்துகளுக்கும் வாக்குகள் உள்ளது பாதிக்கப்பட்டவர்கள் தலித்துகள் வாக்கு அரசியல் அடிப்படையில் நான் இதை கையாளவில்லை காவல்துறை தொடக்கத்தில் இருந்து பாதிக்கப்பட்ட நபர்களையே ஒப்புக்கொள்ள வேண்டும் ஒப்புக்கொள்ள வேண்டும் என வற்புறுத்துகிறார்கள்.  அதை தெரிந்து தான் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று சிபிசிஐடி செய்து விசாரணையில் நிர்பந்தம் செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து விட்டது ஏமாற்றம் அளிக்கிறது மீண்டும் முதலமைச்சர் சந்திக்க உள்ளோம் என தெரிவித்தார்.

வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக காவல்துறையின் மீது நம்பிக்கை இல்லாமல் சிபிஐ விசாரணை கோருகிறோம் என தெரிவித்தார். வேங்கைவயல் விவகாரம் குறித்து விஜய் பேசியதாக தெரியவில்லை என தெரிவித்தார். அவர் அங்கு செல்வதாக தெரிவித்தார்.

காவல்துறை செயல்பாடுகளில் ஆட்சியின் தலையீடு இருக்காது. காவல்துறை விசாரணையில் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்து கிடையாது. பொதுவாக பலவீனமானவர்கள் மீது அநிதியை இழப்பது நடந்து வருகிறது. தலித்துகள் புகார் அளித்தாலும் அதை எடுத்துக் கொள்வதில்லை இதற்கு முதலமைச்சரும் மந்திரியும் பொறுப்பு கிடையாது. காவல்துறை உளவியல் சார்ந்தது அதற்கு போராட்டம் நடத்தி மறியல் செய்து அதன் பிறகு அவர்கள் புகாரை எடுத்துக் கொள்கிறார்கள்.

பெரும்பாலான தலித் மக்களுக்கு அநீதிகள் நடைபெறுகிறது இப்போதும் அது தொடர்ந்து நடைபெறுவது வேதனை அளிப்பதாக உள்ளது. வேங்கைவயல் போக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சிறப்பு நீதிமன்றம் இந்த குற்ற பத்திரிக்கையை ஏற்கக்கூடாது. எதிர்ப்பு தெரிவித்து மனுவை தாக்கல் செய்ய ஏற்பாடு செய்திருக்கிறோம். வரும் திங்கட்கிழமை இந்த மனுவை தாக்கல் செய்ய இருக்கிறோம்.தற்போது Charge Sheet  போடப்பட்டுள்ள நபர்களை கைது செய்தால் கடுமையான எதிர்ப்புகளை சந்திக்க நேரிடும் என தெரிவித்தார்.

MUST READ