கிண்டி மருத்துவமனையில் கத்திக்குத்து தாக்குதலில் காயம் அடைந்த மருத்துவர் பாலாஜி குறித்து துணை முதலமைச்சர் கூறியதாவது , மருத்துவர் பாலாஜிக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. இன்னும் 2-3 மணி நேரத்தில் சுயநினைவு திரும்பிவிடும்.
மருத்துவர் பாலாஜி மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த செயலில் ஈடுபட்ட அந்த நபர் மீது கடுமையான குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவர்கள் மீது அக்கறை கொண்டது இந்த அரசு, கண்டிப்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
சென்னை கலைஞர் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் பாலாஜி அவர்களை பணியில் இருக்கும்போது நபர் ஒருவர் கத்தியால் குத்தியது மிகவும் கண்டனத்துக்குரியது. மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். சமீப காலமாக மருத்துவ ஊழியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்து வருவது வருத்தமளிக்கிறது.
இது போன்ற சம்பவங்கள் நடப்பது மருத்துவ துறையில் பணி செய்யும் ஊழியர்களை அச்சத்திற்கு உள்ளாக்குகிறது.
மருத்துவ ஊழியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் பெரிய அளவில் நடக்கும்போது மட்டுமே அது விவாத பொருளாக மாறுகிறது. ஆனால் ஒவ்வொரு அரசு மருத்துவமனைகளிலும் அன்றாடம் மருத்துவ ஊழியர்கள் அச்சுறுத்தப்படுவதும், தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படுவதும் சாதாரணமாகி விட்டது.
மருத்துவ ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களை தமிழ்நாடு அரசு தகுந்த சட்டங்களின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் கோரிக்கை வைத்துள்ளனர்.
இவ்வாறு தாக்குதல் நடத்திய நபர் மீது கண்டிப்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!