Homeசெய்திகள்சென்னைஆன்லைன் மூலம் பெற்ற டிக்கெட் போலி ; யாரும் ஏமார வேண்டாம்…!

ஆன்லைன் மூலம் பெற்ற டிக்கெட் போலி ; யாரும் ஏமார வேண்டாம்…!

-

குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் வேட்டையன் படம் பார்க்க வந்த 5 பெண்கள் அதிர்ச்சி, ஆன்லைன் மூலம் பெற்ற 5 டிக்கெட் போலி என வாசலில் நிறுத்தப்பட்ட நிலையில் பணம் கொடுத்து வேறு டிக்கெட் பெற்று சென்றனர், மேலும் யாரும் ஏமார வேண்டாம் என பேட்டி.

ஆன்லைன் மூலம் பெற்ற டிக்கெட் போலி ; யாரும் ஏமார வேண்டாம்…!சென்னை ஆலந்தூரை சேர்ந்த ரேகா எனும் பெண் சக தோழிகளுடன் 5 பேர் குரோபேட்டை வெற்றி திரையரங்கில் ரஜினி நடித்த வேட்டையன் திரைப்படத்திம் முதல் சிறப்பு காட்சியை பார்க்க வந்தார், தியேட்டர் உள்ளே நுழைந்த அவர்கள் முதல் காட்சி பார்க்கும் மகிழச்சியில் கைகளை காட்டி மகிழ்ச்சியுடம் அரங்குக்குள் நுழைய முற்பட்டனர்.

அப்போது டிக்கெட் பரிசோதகர் நீங்கள் கொண்டு வந்த டிக்கெட் போலி உள்ளே  அனுமதிக்க முடியாது என தடுத்து நிறுத்தினார்கள், இதனால் அதிர்ச்சியடை அப்பெண்கள் தியேட்டர் நிர்வாகத்திடம் ஆன்லைன் மூலமாக பெற்றதாக கூறி அனுமதிக்க கேட்டனர், ஆனால் அந்த இருக்கைக்கு உண்மையான டிக்கெட் பெற்றவர்கள் வர முற்படுவார்கள் என கூறி மறுத்தனர்.

இதனால் தயங்கி தயங்கி நின்ற ரேகா உள்ளிட்ட 5 பெண்களும் பணம் கொடுக்கிறோம் என கேட்ட பின்னர் தியோட்டர் நிர்வாகம் தரப்பில் 5 டிகெட் (5×700=3,500) ரூபாய் கொடுத்து வேறு டிகெட் பெற்று அதன் மூலம் தியோட்டரில் படம் பார்த்தனர், பின்னர் படம் முடிந்து வெளியே வந்த அப்பெண் ஆலந்தூர் ரேகா இதுபோல் யாரும் ஏமரகூடாது கொஞ்சம் கவனமாக உறுதி செய்து ஆன்லைன் டிக்கெட்  வாங்கும்படி தெரிவித்தார்.

MUST READ