வளசரவாக்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு, கடைகளை மூட உத்தரவு
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜராவதை முன்னிட்டு சென்னை வளசரவாக்கத்தில் போலீஸ் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தை சுற்றியுள்ள தெருக்கள் முழுவதும் தடுப்புகளை அமைத்து போலீஸ் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளது.. காவல்நிலையத்தை சுற்றி 300-க்கும் மேற்பட்ட போலீசார் 3 அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சீமானுடன் வழக்கறிஞர் உட்பட 5 பேர் மட்டுமே காவல்நிலையத்தில் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியினர் காவல்நிலையத்தை சுற்றியுள்ள தெருக்களில் வர போலீஸ் அனுமதி மறுத்துள்ளது. காவல்நிலையத்துக்கு வந்த நாம் தமிழர் கட்சி தொண்டர்களை தடுத்த போலீசாருடன் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வளசரவாக்கம் காவல்நிலையம் அருகே உள்ள அனைத்து கடைகளையும் மூட போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
தன்னை திருமணம் செய்துவிட்டு, ஏமாற்றியதாக போலீசில் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார். புகாரை விஜயலட்சுமி வாபஸ் பெற்ற நிலையிலும், இன்று விசாரணைக்கு சீமான் ஆஜராக உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.