- Advertisement -
திருப்பத்தூர் மாவட்ட பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை.
மதுரவாயல் அடுத்த நூம்பல் பகுதியில் திருப்பத்தூர் மாவட்ட பதிவாளர் செந்தூரப் பாண்டியன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் சப்-ரிஜிஸ்டராக பணியாற்றிய போது அரசுக்கு ரூபாய் ஒரு கோடியே 34 லட்சம் இழப்பு ஏற்படுத்தியதாக காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது செந்தூரப்பாண்டியன் வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
செந்தூரப் பாண்டியன் தற்போது திருப்பத்தூர் மாவட்ட பதிவாளராக பணியாற்றி வருகிறார்.