Homeசெய்திகள்சென்னைகோயம்பேட்டில் லாரிகளிடம் வசூலிக்கப்படும் கட்டண தொகையை குப்பைகளை அகற்ற பயன்படுத்தப்படும்- அமைச்சர் சேகர் பாபு

கோயம்பேட்டில் லாரிகளிடம் வசூலிக்கப்படும் கட்டண தொகையை குப்பைகளை அகற்ற பயன்படுத்தப்படும்- அமைச்சர் சேகர் பாபு

-

கோயம்பேட்டில் பொங்கல் விற்பனைக்கு வரும் லாரிகளிடம் வசூலிக்கப்படும் கட்டண தொகைகளை, அங்குள்ள குப்பைகளை அகற்றும் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை கோயம்பேடு சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில், பொங்கல் சிறப்பு சந்தை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சந்தையை தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சென்னை பெரு நகர வளர்ச்சி குழுமம் அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார் .

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், பொதுமக்களின் வசதிக்காக பொங்கல் பொருட்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் இந்த சிறப்பு சந்தை அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

கடந்த ஆண்டுகளில் டெண்டர் விடப்பட்டு சந்தை நடத்தப்பட்ட நிலையில் இந்தாண்டு சி.எம்.டி.ஏ. வே நேரடியாக சந்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார் அமைச்சர்.

சுமார், ஏழரை ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த சந்தையில், தற்போது வரை 294 லாரிகள் வந்துள்ளதாக கூறினார்.

கரும்பு லாரிகளுக்கு  கட்டணமாக தலா 1500 ரூபாய் வசூலிக்கப்படுவதாகவும், மஞ்சள் லாரிகளுக்கு கட்டணமாக தலா 1000 ரூபாய் வசூலிக்கப்பட்டுவதாகவும் தெரிவித்தார்.

மேலும், வசூலிக்கப்படும் தொகை, சந்தையில் குவியும் குப்பைகளை அகற்ற பயன்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு, பண்டிகையின் போதும் சிறப்பு சந்தை ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சர் சேகர்பாபு நம்பிக்கை தெரிவித்தார்.

பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் வந்து செல்ல போக்குவரத்தை கட்டுப்படுத்தி நெரிசலை தவிர்க்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

MUST READ