சென்னையில் ஏசி இயந்திரம் கோளாறு காரணமாக தாய் மற்றும் மகள் பலி…
ஆவடி அடுத்த அம்பத்தூரில் மின் கசிவால் ஏசி தீப்பிடித்து எரிந்து புகையினால் மூச்சு திணறி இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அம்பத்தூர் மேனாம்பேடு ஏகாம்பரம் நகரை சேர்ந்த ஹகிலா வ/50, இவர் கணவரை இழந்தவர். இவருடைய மகள் நஸ்ரின் வ/16 ,இவர் மேனாம்பேடு தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.இவர்கள் இருவரும் வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை வீட்டிலிருந்து புகை வருவதை பார்த்து அக்கம் பக்கத்தார் போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்க்கும்போது AC ல் மின் கசிவு ஏற்பட்டு வெடித்து, தீப்பிடித்து மின் கம்பிகளின் மூலம் தீ பரவிக்கொண்டு இருந்த அறை முழுவதும் எரிந்து வீடு புகைமூட்டமாக மாறி உள்ளது.
இந்நிலையில் புகை மூட்டத்தால் மூச்சு திணறி சுய நினைவின்றி இருவரும் சிறிய தீ காயத்துடன் இறந்து கிடந்துள்ளனர். மேற்கண்ட இருவரையும் அக்கம் பக்கத்தினர் வீட்டின் வெளிப்புறம் கொண்டு வந்து அம்பத்தூர் மகாலட்சுமி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
கூட்டணி முறிவு- மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிக்கை தாக்கல்!
மருத்துவமனையில் இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் இறந்து விட்டதாக கொடுத்த தகவலின் பேரில் இறந்த இருவரின் உடல்களையும் கேஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவ ம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.