எண்ணூர் ரயில் நிலையம் அருகில் கும்மிடிப்பூண்டி நோக்கி செல்லும் வழித்தடத்தில் உயர் மின்னழுத்த கம்பியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதனால் அவ்வழியாக செல்லும் மின்சார மற்றும் விரைவு ரயில்கள் எண்ணூர் ரயில் நிலையம் அருகில் இன்று காலை நிறுத்தப்பட்டன. தொழில்நுட்ப கோளாறை ரயில்வே ஊழியர்கள் சரி செய்துள்ளனர்.
இதனால், சுமார் 2 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.