சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் ரத்து
சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக இன்று முதல் நாளை காலை வரை 14 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை பேசின்பிரிட்ஜ் சந்திப்பு- வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் இடையே பணிகள் நடப்பதால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று இரவு 1.30 மணி முதல் நாளை காலை 6.30 மணி வரை 7 மணி நேரத்திற்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 14 ரயில்கள் முழுமையாகவும், 4 ரயில்கள் பகுதியாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதேபோல் கோடம்பாக்கம்- தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகளில் வசதிக்காக தாம்பரம்- செங்கல்பட்டு இடையே குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டும் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. காலை 11,11.50 மணி, மதியம் 12.30, 12.50, 1 மணி, 1.15, 2.15 ஆகிய நேரங்களில் மட்டும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.