Homeசெய்திகள்சென்னையுஜிசியின் புதிய நெறிமுறைகள் ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் - சொ.ஜோ அருண்

யுஜிசியின் புதிய நெறிமுறைகள் ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் – சொ.ஜோ அருண்

-

- Advertisement -

யுஜிசியின் புதிய வரைவு நெறிமுறைகளை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும்!

யுஜிசி வரைவு கொள்கையை எதிர்த்து தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையர் 3 -ஆவது குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம். “சிறுபான்மையினர் மக்கள் நடத்துகின்ற கல்லூரிகளுக்கு எதிராகவும், சிறுபான்மையினர் மக்களின் உரிமைகள் பாதுகாப்பிற்கு எதிராக ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை உள்ளது.

யுஜிசியின் புதிய நெறிமுறைகள் ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் - சொ.ஜோ அருண்ஏறத்தாழ 70 சதவீத கல்லூரிகள் ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்துள்ளது, இதனை உடனடியாக கைவிட வேண்டும். யுஜிசி வரைவு கொள்கையை திரும்ப பெறவேண்டும் என்று தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையர் கூட்டரங்கில் 3 – ஆவது குழுக் கூட்டம் மாநில சிறுபான்மையினர் ஆணைய குழு தலைவர் அருட்தந்தை சொ.ஜோ அருண் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில சிறுபான்மையினர் ஆணைய துணைத் தலைவர் இறையன்பன் குத்தூஸ், ஆணைய உறுப்பினர்கள் நாகூர் நஜிமுதீன், முகமது ரஃபி, வசந்த் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் பல்வேறு கருத்துக்கள் மற்றும் பிரச்சனைகள், விஷயங்கள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது குறிப்பாக யுஜிசி வரைவு கொள்கையை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து பேசிய சிறுபான்மையினர் ஆணைய குழு தலைவர் அருட்தந்தை சொ.ஜோ அருண், கடந்த சில தினங்களுக்கு முன்பு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), புதிய வரைவு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இந்த வரைவு ஒழுங்குமுறைகள் சிறுபான்மையினர் மக்கள் நடத்துகின்ற கல்லூரிகளுக்கு எதிராகவும், சிறுபான்மையினர் மக்களின் உரிமைகள் பாதுகாப்பிற்கு எதிராக உள்ளது. எனவே யுஜிசியின் புதிய வரைவு நெறிமுறைகளைத் ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சிறுபான்மையினருக்கு கொடுத்த உரிமையை பறிப்பது போல் இந்த வரைவு ஒழுங்குமுறை உள்ளது என்றார்.

MUST READ