Homeசெய்திகள்சென்னைஅடுக்குமாடி குடியிருப்பில் நில அதிர்வு - அதிகாரிகள் ஆய்வு

அடுக்குமாடி குடியிருப்பில் நில அதிர்வு – அதிகாரிகள் ஆய்வு

-

அடுக்குமாடி குடியிருப்பில் நில அதிர்வு – அதிகாரிகள் ஆய்வு

சென்னை கொரட்டூரில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான அடுக்குமாடி கட்டிடத்தில் அதிர்வு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய சென்னை சரக மேற்பார்வை பொறியாளர் ராமகிருஷ்ணன், செயற் பொறியாளர் மற்றும் வீட்டு வசதி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அடுக்குமாடி குடியிருப்பில் அதிர்வு - அதிகாரிகள் ஆய்வு

கட்டிடத்தை ஆய்வு செய்த அதிகாரிகள் அங்குள்ள அனைத்து தூண்களையும் பார்வையிட்டனர். நில அதிர்வு ஏற்பட்ட எந்த தடையமும் இல்லை எனவும் ஏதேனும் சிசிடிவி காட்சிகள் இருக்கின்றதா என கேட்டனர்.

அடுக்குமாடி குடியிருப்பில் அதிர்வு - அதிகாரிகள் ஆய்வு

திங்கட்கிழமை அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த வல்லுநர் குழு ஆய்வு நடத்த இருப்பதாகவும், ஆய்வின் முடிவில் கட்டிடத்தின் உறுதி தன்மை குறித்து சான்று அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

MUST READ