Homeசெய்திகள்சென்னைசர்வதேச மகளிர் தினத்தையொட்டி வாக்கத்தான்

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி வாக்கத்தான்

-

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி தென்னிந்திய மகப்பேறு மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் சென்னையில் ‘வாக்கத்தான்’ நிகழ்ச்சி நடைபெற்றது.

பாலின பாகுபாடு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுத்தல், டிஜிட்-All தொழில்நுட்பத்தில் பெண்களுக்கு பாதுகாப்பான இணையதள சேவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ‘வாக்கத்தான்’ நிகழ்ச்சி, சென்னை பெசன்ட் நகரில் உள்ள எலியட்ஸ் கடற்கரையில் அரங்கேறியது.

ஆக்ஸி எனப்படும் தென்னிந்திய மகப்பேறு மருத்துவர்கள் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் மருத்துவ அமைப்புகள் இணைந்து நடத்திய இந்த வாக்கத்தான் நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற டாக்டர் ஜெயராணி காமராஜ் பேசுகையில், பெண்களின் முன்னேற்றமான பாதைக்கு இணையதளம் ஒரு அடித்தளம் ஆகும் என்றார்.

இந்த இணையதளம் பெண்களுக்குரிய பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி மகளிர் தினத்தில் இந்த விழிப்புணர்வு வாக்கத்தான் ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

முன்னாள் சர்வதேச ஓட்டப்பந்தய வீராங்கனை சைனி வில்சன், தென்னிந்திய மகப்பேறு மருத்துவர்கள் சங்க செயலாளர் குந்தவை, மருத்துவ நிபுணர்கள் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில துணை செயலாளர் சுகந்தி உள்பட பலரும் பங்கேற்று உலக மகளிர் தின விழாவை கொண்டாடினர்.

MUST READ