தமிழகத்தில் பரவலாக்கப்பட்ட தொழில் முதலீடு காரணமாக தென் தமிழகமும் வளர்ச்சி அடைந்து வருகிறது. நமது காப்புரிமை மூலம் உருவாக்கும் பொருட்களை நாம் எப்போது தயாரிக்க போகிறோம் என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசி உள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அழகப்பா காலேஜ் ஆப் டெக்னாலஜியின் 80வது ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், இது போன்ற நிகழ்ச்சிகள் வழக்கமானது தான். ஆனால் இதன் நோக்கம் மிகவும் உயர்ந்தது.நாம் யாரை கொண்டாடுகிறோம்; எதற்கு கொண்டாடுகிறோம் என்று தற்போது படிக்கும் மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்றார். அழகப்பா என்ற மனிதரை பற்றி நாம் மிகவும் குறைவாக பேசுகிறோம்.80 ஆண்டுகளுக்கு முன் ஒரு மனிதர் 300 ஏக்கர் நிலம்,4 கோடி பணம் என அறிவு சார் வளர்ச்சிக்கு கொடுத்துள்ளார்.
தமிழர்கள் பற்றியும்,தமிழ்நாட்டின் பெருமைகள் பற்றி நாம் உரக்க பேச வேண்டும்.தமிழ்நாடு இந்தியாவின் இரண்டாவது பொருளாதார மாநிலம் என்று சொல்கிறார்கள் அது தவறு.
“மும்பை சீட்டிங்” செய்வதாகவும் மகாராஷ்டிராவில் இருந்து மும்பை எடுத்து விட்டால் அங்கு ஒன்றும் கிடையாது.ஒன்றுமே இல்லாமல் மஹாராஷ்டிராவை பிரமோட் செய்கிறார்கள்.அதைப்பற்றி நான் பேசவிரும்ப வில்லை. இந்தியா முழுவதும் அமைப்பு சார்ந்த தொழில் நிறுவனங்களில் தமிழ்நாட்டில் தான் 43 சதவீத பெண்கள் பணியாற்றி வருகின்றனர்.35 சதவீத எலெட்ரானிக்ஸ் பொருட்கள் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
நமது காப்புரிமை மூலம் உருவாக்கும் பொருட்களை நாம் எப்போது தயாரிக்க போகிறோம்.எத்தனை ஆண்டுகள் அடுத்தவர்களின் காப்புரிமை பெற்ற பொருட்களை தயாரித்துக் கொடுக்கப் போகிறோம்.நமது ஐபோன், நமது Google போன்று எப்போது நாம் ஒன்றை உருவாக்க போகிறோம்? ஆய்வுகள் நோக்கி கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் வெறும் டிகிரியை மட்டும் முடித்துவிட்டு செல்லக்கூடாது என்றார். ஸ்ரீபெரும்புதூரில் தயாரிக்கப்படும் பொருட்கள் சர்வதேச தரமிக்கவையாக இருப்பதாக ஜப்பானிய நிறுவனங்களின் தலைவர்கள் நம்மிடம் தெரிவித்துள்ளார்கள் என்றார்.
தொழில்துறை அமைச்சர் டிஆர்.பி ராஜா செய்தியாளர் சந்திப்பில் பேசியது, அழகப்பா செட்டியாரின் அளப்பரிய சாதனைகள் குறித்தும், ஏசி டெக் கல்வி நிறுவனத்தின் சாதனைகள் குறித்தும் இந்த நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தமிழகத்தின் பெருமைகள் தமிழகத்தின் தொன்மைகள் குறித்து நாம் பேச வேண்டும்.தமிழ்நாட்டின் பெருமைகளாக உலகளாவிய பல நிறுவனங்களுக்கு இன்று நமது திறன் மிக்க மாணவர்கள் தான் அங்கே சென்று கோலோச்சிகிறார்கள் என்பதையும் நாம் அறிவோம்.
இன்னமும் மற்றவர்களுகளின் காப்புரிமைக்கு உற்பத்தி செய்து கொடுபவர்களாக இல்லாமல், நாம் நமது சொந்த காப்புரிமையை உற்பத்தியை செய்ய வேண்டும். அறிவுசார் வளர்ச்சியை பெற்று புதிய காப்புரிமை பெற்று அதை நாம் உற்பத்தி செய்ய வேண்டும். மாணவர்கள் எமர்ஜிங் சயின்ஸ் படிக்க வேண்டும். அடுத்த கட்டத்திற்கு தமிழ்நாட்டையும் இந்தியாவையும் உயர்த்த வேண்டும் என்றார்.
ஆராய்ச்சி மாணவர்களுக்கு இந்த ஆட்சியில் தான் தனி நிதி வழங்கப்பட்டு வருகிறது. ஆராய்ச்சி செய்யும் அனைத்து மாணவர்களின் பிரச்சனையாக தோல்வியை கண்டு பயம் உள்ளது. என்ன செய்வது என்ற பயத்திலேயே கவனமாக ரிஸ்க் எடுக்காமல் படிக்கிறார்கள் ரிஸ்க் எடுத்து கற்பனை திறனை முழுமையாக கட்டவிழ்த்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
தமிழகத்தை இரண்டாவது பொருளாதாரம் என்று சொல்வார்கள்.எங்கு தலைமை அலுவலகம் (ஹெட் குவாட்டர்ஸ்) இருக்கோ அங்குதான் எல்லா நம்பர்ஸும் குவிந்து விடும் அதனால் தான் மும்பையை சொல்கிறார்கள் அது தவறான புரிதல் என்றார்.
ஸ்ரீபெரும்புதூரில் ஏற்கனவே நிறைய தொழில் நிறுவனங்கள் உள்ளது ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பரவலாக்கப்பட்ட வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும். எனவே ஒரு முதலீட்டாளர்களை கொண்டு வரும்போது கேட்டகிரி வாரியாக இடங்களை தேர்வு செய்து கொடுக்கிறோம். தொழில் முதலீடுகளை தமிழகம் முழுவதும் பரவலாக்கம் செய்யும் வகையில் பல நிறுவனங்களை தென் தமிழகத்திலும் முதலீடு செய்ய வைத்துள்ளோம். பரவலாக்கப்பட்ட தொழில் முதலீடு காரணமாக தென் தமிழகமும் வளர்ச்சி அடைந்து வருவதாக தெரிவித்தார்.
இன்று வெளியாகுமா ‘விடாமுயற்சி’ படத்தின் முதல் பாடல்? …. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!