Homeசெய்திகள்சென்னைமும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம்-  கோலமிட்டு இல்லத்தரசிகள் எதிர்ப்பு!

மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம்-  கோலமிட்டு இல்லத்தரசிகள் எதிர்ப்பு!

-

- Advertisement -

மதுரவாயில் அருகே அயப்பாக்கம் ஊராட்சியில் மகளிர் குழுவினர் மற்றும் இல்லத்தரசிகள் தங்களது வீடுகளுக்கு முன்பு கோலமிட்டு மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம்-  கோலமிட்டு இல்லத்தரசிகள் எதிர்ப்பு!தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக எதிர்ப்புகள் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. அந்த வகையில் மதுரவாயில் அடுத்த அயப்பாக்கம் ஊராட்சியில் மகளிர் குழுவினர் மற்றும் இல்லத்தரசிகள் தங்களது வீடுகளுக்கு முன்பு மும்மொழி கொள்கைக்கு எதிராக கோலமிட்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம்-  கோலமிட்டு இல்லத்தரசிகள் எதிர்ப்பு!அயப்பாக்கம் ஊராட்சி ஹவுசிங் போர்டில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு முன்பு கோலமிட்டதோடு இந்தியை திணிக்காதே! தமிழர்களை வஞ்சிக்காதே! மீண்டும் மொழிப்போரை உருவாக்காதே! உள்ளிட்ட பல்வேறு வாசகங்களை எழுதி மும்மொழிக் கொள்கைக்கு எதிராக கோலமிட்டு இருந்தனர். இது குறித்து பேசிய பெண்கள் தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க வேண்டாம். எங்களுக்கு தமிழ் மொழி இருக்கிறது ,தேவைப்பட்டால் ஆங்கிலத்தை பயன்படுத்தி கொள்வோம் ,திட்டமிட்டு எங்களுக்கு இந்தியை திணிக்க வேண்டாம் . அதேபோன்று மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் மொழியை பயன்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் சர்ச்சை… பாஜக அரசு உண்மையில் என்ன செய்திருக்க வேண்டும்..?

MUST READ