Homeசெய்திகள்சென்னைமகளிர் தினத்தையொட்டி- யோகாசனம் செய்து உலகசாதனை

மகளிர் தினத்தையொட்டி- யோகாசனம் செய்து உலகசாதனை

-

தாம்பரத்தில் சிறுமி முதல் மூதாட்டி வரை ஒரே நேரத்தில் 112 பேர், 112 வகையான யோகாசனம் செய்து உலகசாதனை படைத்து அசத்தினர்.

தாம்பரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தீபாம் யோகாலாயா அகடாமி சார்பில் உலக மகளிர் தினத்தையொட்டி உலகசாதனை படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சிறுமிகள் முதல் 70 வயது மூதாட்டி வரை 112 பெண்கள் கலந்து கொண்டு 112 வகையான யோகாசனம் செய்து நோவா வேர்ல்டு ரெக்கார்டில் இடம் பிடித்து அசத்தினார்கள்.

இதில் சிறப்பு விருந்திராக தமிழ்நாடு உடற்கல்வியில் மற்றும் விளையாட்டு பல்கலை கழக பேராசிரியை டாக்டர் செல்வ லட்சுமி, தீபம் யோகாலாயா கிட்ஸ் அகடாமியின் நிறுவனர் தீபா ஆகியோர் யோகசனத்தில் கலந்து கொண்ட 112 பெண்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தனர்.

MUST READ