பிறந்த குழந்தைக்கு சந்திரயான் என பெயர் சூட்டி கொண்டாடிய பெற்றோர்கள்:
சந்திரயான்-3 நிலவில் கால் பதித்த தருணத்தில் ஒடிசாவில் பிறந்த குழந்தைகளுக்கு சந்திரயான் என பெயர் சூட்டி இந்திய விஞ்ஞானிகளின் சாதனையை கொண்டாடி உள்ளனர்.
இந்திய விஞ்ஞானிகள் வெற்றியை பலரும் பல்வேறு விதங்களில் கொண்டாடிய நிலையில் நேற்று மாலை அதே நேரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு பெற்றோர்கள் சந்திரயான் என பெயர் சூட்டியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .
ஒடிசா மாநிலம் கேந்த்ரபாரா மாவட்ட மருத்துவமனையில் நேற்று முன்தினம் மாலை சந்திரயான்-3 நிலவில் தரை இறங்கிய நேரத்தில் ஒரு ஆன் குழந்தையும் ,மூன்று பெண் குழந்தைகளும் பிறந்தன. சந்திரயான் நிலவில் கால் பதித்த தருணத்தில் தங்களுக்கு குழந்தை பிறந்ததை பெரும் மகிழ்ச்சியாக கருதி அதனை வெளிப்படுத்தும் விதமாக தங்களது குழந்தைகளுக்கு சந்திரயான் என பெயர் சூட்டி இந்திய சாதனையை கொண்டாடியுள்ளனர். இது குறித்து பெற்றோர் கூறும் பொழுது ” இந்திய விஞ்ஞானிகள் சாதனை படைத்த நேரத்தில் எங்களுக்கு குழந்தை பிறந்தது இரட்டிப்பு , மகிழ்ச்சியாக உள்ளது” என்று கூறினர் .