Homeசெய்திகள்சினிமாஇந்தியன் 2 படப்பிடிப்பில் கிராம மக்கள் முற்றுகை

இந்தியன் 2 படப்பிடிப்பில் கிராம மக்கள் முற்றுகை

-

- Advertisement -

இந்தியன் 2 படப்பிடிப்பில் கிராம மக்கள் முற்றுகை

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு சென்னையை அடுத்த, கல்பாக்கம் அருகில் சதுரங்கப்பட்டிணத்தில் நடைபெற்று வருகிறது. அங்கு உள்ள பழமையான டச்சுக் கோட்டையில் சண்டைக் காட்சிகளை படக்குழு எடுத்துக் கொண்டிருக்கின்றனர். கடந்த 5 நாட்களாக நடந்து வரும் படப்பிடிப்பை வேடிக்கைப் பார்க்க கிராமத்து மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று நடந்த இந்தியன் 2 படப்பிடிப்பின் அருகில் இருந்த ஊரில் கோயிலுக்கு நிதி கேட்டு சிலர் வந்ததாகவும் இது தொடர்பான பேச்சு வார்த்தையில் வாக்குவாதம் ஏற்பட்டு படப்பிடிப்பை கிராமத்து மக்கள் முற்றுகையிட்டனர். பின்னர் காவல் துறையினர் விரைந்து சென்று ஊர் மக்களுடன் பேசி சமாதானம் செய்து வைத்தனர். இதன் பிறகு படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. இந்த படத்தின் சண்டை காட்சிக்காக கமல்ஹாசன் சிறப்பு பயிற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ