நடிகர் சசிகுமார், ஜி.வி. பிரகாஷ் பட இயக்குனருடன் கூட்டணி அமைப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு சுப்ரமணியபுரம் என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சசிகுமார். அதே சமயம் நடிப்பதிலும் ஆர்வமுடைய இவர் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். அந்த வகையில் தற்போது ப்ரீடம், எவிடன்ஸ், டூரிஸ்ட் ஃபேமிலி, மை லார்ட் ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார் சசிகுமார். மேலும் சில படங்களிலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி வருகிறார். அந்த வகையில் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான சிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் இயக்குனர் சசியுடன் கூட்டணி அமைக்க உள்ளார். இவர்களது கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் லப்பர் பந்து பட நடிகை சுவாசிகா கதாநாயகியாக நடிக்கப் போகிறார் என சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் கள்ளக்குறிச்சியில் தொடங்கும் எனவும் புதிய தகவல் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.
இயக்குனர் சசி, சிவப்பு மஞ்சள் பச்சை படத்திற்கு பிறகு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் நூறு கோடி வானவில் எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.