தமிழ் படங்களை ஏன் இந்தியில் டப்பிங் செய்கிறார்கள் என பவன் கல்யாண் கேள்வி எழுப்பி உள்ளார்.
மத்திய அரசின் முன்மொழிக் கொள்கையை தமிழ்நாடு ஏற்க மறுக்கிறது. இந்தியை திணிக்கும் மாற்று வழியே முன்மொழிக் கொள்கை என தமிழ்நாடு அரசு தெரிவிக்கிறது. இது இந்தியாவில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில் தான் பிரபல நடிகரும் ஆந்திராவின் துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் பல கேள்விகளை முன் வைத்துள்ளார். அதன்படி, “தமிழ் மக்கள் இந்தி திணிப்பை எதிர்க்கின்றனர் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவர்களுக்கு இந்தி தேவையில்லை என்றால், நிதி ஆதாயத்திற்காக மட்டும் ஏன் தமிழ் படங்களை இந்தியில் டப்பிங் செய்கிறார்கள்? ஆனால் இந்திய ஏற்க மறுப்பது என்ன லாஜிக்?
“Tamil People always complain that North is imposing Hindi on them. So, don’t dub and release your films in Hindi. Don’t bring technicians from North India”
– PawanKalyan🙄👀 pic.twitter.com/QZpXMp7tsS— AmuthaBharathi (@CinemaWithAB) March 14, 2025
பீகார், உத்திர பிரதேசம், சத்தீஸ்கர் போன்ற இந்தி பேசும் மாநிலங்களில் இருந்து வருவாயை விரும்புகிறார்கள். ஆனால் இந்தி வேண்டாம் என்று அவர்கள் கூறுவது நியாயமா? பீகாரில் இருந்து வரும் தொழிலாளர்களை அவர்கள் வரவேற்கிறார்கள். ஆனால் இந்தி மொழியை நிராகரிக்கிறார்கள். ஏன் இந்த முரண்பாடு? இது போன்ற மனநிலை மாற வேண்டாமா? என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்துள்ளார் பவன் கல்யாண்.