Homeசெய்திகள்சினிமாபட்டைய கிளப்பும் பிரதீப்..... 3 நாட்களில் ரூ.50 கோடி வசூலை கடந்த 'டிராகன்'!

பட்டைய கிளப்பும் பிரதீப்….. 3 நாட்களில் ரூ.50 கோடி வசூலை கடந்த ‘டிராகன்’!

-

- Advertisement -

டிராகன் திரைப்படம் மூன்று நாட்களில் ரூ. 50 கோடியை கடந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.பட்டைய கிளப்பும் பிரதீப்..... 3 நாட்களில் ரூ.50 கோடி வசூலை கடந்த 'டிராகன்'!

கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் டிராகன் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து அனுபமா பரமேஸ்வரன், மிஸ்கின் கயடு லோஹர், கௌதம் வாசுதேவ் மேனன், விஜே சித்து, ஜார்ஜ் மரியான் மற்றும் பலர் நடித்திருந்தனர். அஸ்வத் மாரிமுத்து இந்த படத்தை இயக்கியிருந்தார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க லியோன் ஜேம்ஸ் படத்திற்கு இசையமைத்திருந்தார். லவ் டுடே படத்திற்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்தது. அதன்படி இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தரமான திரைக்கதையை கொடுத்து ரசிகர்களை திருப்திப்படுத்தியுள்ளார். அதாவது பிரதீப் ரங்கநாதனும் ஃபுல் எனர்ஜியுடன் தனது நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். பட்டைய கிளப்பும் பிரதீப்..... 3 நாட்களில் ரூ.50 கோடி வசூலை கடந்த 'டிராகன்'!இப்படம் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு பெருகி வருவதால் கூடுதல் திரையரங்குகளும் ஒதுக்கப்பட்ட நிலையில் விடுமுறை நாட்களிலும் இந்த படத்தைக் காண ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு வந்தனர். எனவே இப்படம் வெளியான முதல் மூன்று நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 25 கோடி வரை வசூல் செய்திருப்பதாகவும் உலக அளவில் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ