Homeசெய்திகள்சினிமாவிஜய் சேதுபதிக்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் இயக்குனர்!

விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் இயக்குனர்!

-

- Advertisement -

நடிகர் விஜய் சேதுபதியின் புதிய படத்தில் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் வில்லனாக இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

விஜய் சேதுபதி தற்போது பான் இந்தியா நடிகராக வளர்த்துள்ளார். கதாநாயகன் என்ற எல்லையை உடைத்து நல்ல கதை என்றால் எந்த கதாபாத்திரத்திலும்  நடிப்பதற்கு எப்போதும் தயாராக இருப்பார் விஜய் சேதுபதி.

இந்நிலையில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாக இருக்கும் 50-வது படத்தை ‘குரங்கு பொம்மை’ படத்தின் இயக்குனர் நிதிலன் சுவாமிநாதன் இயக்க இருக்கிறார். படத்திற்கு ‘மகாராஜா‘ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வித்தியாசமான தோற்றத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது இந்தப் படம் குறித்த புதிய அப்டேட் கிடைத்துள்ளது. படத்தில் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அனுராக் காஷ்யப் தமிழில் நயன்தாரா மற்றும் அதர்வா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக மிரட்டியிருந்தார். அந்தப் படத்தில் விஜய் சேதுபதியும் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்தப் படம் இருக்கும் பேமிலி எமோஷனல் படமாக உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

MUST READ