துணிவு படத்திற்கு பின் அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படம் ‘விடா முயற்சி‘. இத்திரைப்படத்தினை மகிழ் திருமேனி இயக்குகிறார். இவர் மீகாமன், தடம், தடையறத் தாக்க, கழக தலைவன், உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
தற்போது முதன்முறையாக அஜித்துடன் இணைந்து ‘விடாமுயற்சி’ திரைப்படத்தை இயக்குகிறார். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத் இசையிலும் இப்படம் உருவாக இருக்கிறது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதத்தில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இப்படத்தின் கதாநாயகிகள் குறித்து எந்த தகவலும் இதுவரை தெரியவில்லை.
இந்நிலையில் ஐஸ்வர்யா ராய், கத்ரீனா கைஃப், கரீனா கபூர், திரிஷா, கங்கனா ரனாவத் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாகவும் இவர்களில் யாரேனும் இருவர் இப்படத்தில் கதாநாயகிகளாக நடிப்பார்கள் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.