நடிகை பூஜா ஹெக்டே, சூர்யா குறித்து பேசி உள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் பூஜா ஹெக்டே தற்போது சூர்யாவுடன் இணைந்து ரெட்ரோ எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் 2D நிறுவனமும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இதற்கு இசையமைத்துள்ளார். இந்த படமானது காதல் கலந்த கதைக்களத்தில் உருவாகி இருக்கிறது. அதாவது கேங்ஸ்டராக இருக்கும் ஹீரோ தன்னுடைய காதலுக்காக, குடும்பத்திற்காக அதையெல்லாம் விட்டு விடுகிறார். ஆனாலும் அவர் கடந்து வந்த விஷயங்கள் சில அவரை துரத்துகிறது. அதையெல்லாம் அவர் எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் இப்படத்தின் கதை என சொல்லப்படுகிறது. கார்த்திக் சுப்பராஜ் பொதுவாகவே கேங்ஸ்டர் கதையை கையில் எடுப்பார். ஆனால் ரெட்ரோ படத்தின் மூலம் லவ் ஸ்டோரியை கையில் எடுத்திருக்கிறார். எனவே கார்த்திக் சுப்பராஜ் ஸ்டைலில் காதல் படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி வருகின்ற மே 1ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதே சமயம் நாளை (ஏப்ரல் 18) இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே சமீபத்தில் நடந்த பேட்டியில் சூர்யா குறித்து பேசி உள்ளார். அதன்படி அவர், “சூர்யா மிகவும் நல்ல நடிகர். நடிப்பில் ரியாக்சன்ஸ் என்பது மிகவும் முக்கியம். அவர் உண்மையான உணர்ச்சிகளை எனர்ஜியுடன் கொடுப்பார். அதனாலயே அவருடன் இணைந்து நடிப்பது எங்களுக்கு சுலபமாக இருக்கும். அவர் மிகவும் ஊக்கம் அளிக்கக் கூடியவர். அவர் கண்களாலேயே நிறைய பேசுவார்” என்று தெரிவித்துள்ளார்.