விடுதலை 2 படக்குழுவினர் இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை பாகம் 1 திரைப்படம் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதைப் போல் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ரசிகர்களின் கவனம் ஈர்த்தன. அதைத்தொடர்ந்து கடந்த டிசம்பர் 20ஆம் தேதி வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2 திரைப்படம் வெளியானது. முதல் பாகத்தை போல் இந்த பாகத்திற்கும் இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். ஆர் எஸ் இம்போடெயின்மென்ட் நிறுவனமும் கிராஸ் ரூட் பிலிம் நிறுவனமும் இணைந்து படத்தினை தயாரித்திருந்தது.
Team #ViduthalaiPart2 met #Ilaiyaraaja sir to express gratitude for his incredible contribution to the film’s success. Movie hits successful 4th day!
Film by #VetriMaaran
An @ilaiyaraaja Musical
@VijaySethuOffl @sooriofficial @elredkumar @rsinfotainment @GrassRootFilmCo… pic.twitter.com/cgytq42pED— RS Infotainment (@rsinfotainment) December 23, 2024
இதில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், கென் கருணாஸ், இளவரசு, கௌதம் மேனன், சேத்தன், ராஜீவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தில் விஜய் சேதுபதி தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதே சமயம் இளையராஜாவின் பின்னணி இசை படத்திற்கு பெரும் பலம் சேர்த்துள்ளது. அந்த வகையில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி நடை போட்டு வருகிறது. இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்ட பட குழுவினர் இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.