இயக்குனர் விக்னேஷ் சிவன் எல்ஐகே படம் குறித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் சிம்பு, வரலட்சுமி நடிப்பில் வெளியான போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதை தொடர்ந்து இவர் இயக்கிய நானும் ரெளடி தான் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. தற்போது இவர், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, கிரித்தி ஷெட்டி, சீமான் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், ரௌடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. அனிருத் இதற்கு இசையமைத்திருக்கிறார். சயின்ஸ் பிக்சன் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில் இப்படம் குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், “ஒவ்வொருவரின் மிகுந்த அன்பு, ஆர்வம், நேர்மை மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றால் இந்த படம் உருவாகி இருக்கிறது. ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பில் நிறைய சவால்கள் இருந்தன. ஆனால் நாங்கள் ஒரு நாளும் புன்னகைக்க மறந்ததில்லை. எங்கள் பணியை ரசித்து செய்தோம். இந்தப் ஃபிரேம்களில் உள்ள அனைவரின் ஆதரவும் இல்லாமல் இந்த படத்தை உருவாக்குது சாத்தியமில்லாதது.
View this post on Instagram
ஒரு புதுமையான பொழுதுபோக்கு திரைப்படத்தை உருவாக்க எங்களால் முடிந்த அளவு முயற்சிகளை எடுத்ததில் நாங்கள் பெருமை அடைகிறோம். தற்போது இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் உங்கள் அனைவரின் அன்புடனும் ஆதரவுடன் தொடங்கி இருக்கிறது. உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இந்த படத்தை கொண்டாட பண்டிகை தேதியில் இப்படத்தை உங்களுக்காக கொண்டு வருவோம்” என்று குறிப்பிட்டு படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார் விக்னேஷ் சிவன்.