லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை சென்னை அல்லாமல் வேறு மாவட்டத்தில் வைக்கலாம் என்று விஜய் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
விஜய் படங்களின் ஆடியோ வெளியீட்டு விழா என்றாலே ரசிகர்களுக்கு திருவிழா கொண்டாட்டம் தான். அதுவும் அவரின் குட்டிக் கதையை கேட்கவே ரசிகர்கள் தவம் இருக்கின்றனர். ஒவ்வொரு ஆடியோ லாஞ்சிலும் தனது அசத்தல் பேச்சின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் விஜய்.
விஜய் படங்களின் ஆடியோ வெளியீட்டு விழா பெரும்பாலும் சென்னையில் தான் நடக்கும் .ஆனால் இந்த முறை லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை சென்னை அல்லாமல் வேறு ஏதாவது மாவட்டத்தில் வைக்கலாம் என்று விஜய் முடிவெடுத்துள்ளதாக லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் 2010-ம் ஆண்டு திருச்சியில் 25 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தார் விஜய். 2011 ஆம் ஆண்டு மதுரையில் ‘வேலாயுதம்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. 2011 ஆம் ஆண்டில் கோயம்புத்தூரில் ‘நண்பன்’ படத்தின் ஆடியோ லான்ச் நடத்தப்பட்டது. எனவே திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் இந்த மூன்று மாவட்டங்களில் ஏதோ ஒன்றில் லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த விஜய் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.